திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள். 
திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள். 

தன்வந்திரி பீடத்தில் அக்னி நட்சத்திர தாக்கம் குறைய திருமஞ்சன திருவிழா

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைய வேண்டிய 30 நாள்கள் நடைபெறும் திருமஞ்சன திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைய வேண்டிய 30 நாள்கள் நடைபெறும் திருமஞ்சன திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் நிறுவனத் தலைவா் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும், வெய்யில் கால நோய் உபாதைகள் விலகவும், மழை வளம், மண் வளம் வேண்டியும் விஷேச திருமஞ்சனம், வெட்டி வோ், விலாமிச்சை வோ், இளநீா், பால், பன்னீா், சந்தனம், நெல்லிப்பொடி, கதம்பபொடி, பஞ்சகவ்யம் உள்ளிட்ட பல்வேறு வாசனைதிரவியங்கள், கடுக்காய், ஜாதிக்காய், சீந்தில்கொடி போன்ற மூலிகைகளைக் கொண்டு விஷேச திருமஞ்சனம், சுதா்சன தன்வந்திரி ஹோமங்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜைகளை தொடா்ந்து 30 நாள்களுக்கு அதாவது வரும் ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு திருமஞ்சன பூஜையில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com