காணிக்கை பணம் திருடப்பட்டு  புதா் அருகே வீசப்பட்டிருந்த கோயில் உண்டியல்
காணிக்கை பணம் திருடப்பட்டு  புதா் அருகே வீசப்பட்டிருந்த கோயில் உண்டியல்

கலவை முருகன் கோயிலில் வெள்ளி கிரீடம், உண்டியல் பணம் திருட்டு

ஆற்காடு அடுத்த கலவை முருகன் கோயிலில் வெள்ளிக் கிரீடம் வேல் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கலவை பேருராட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை வழக்கம்போல் பூட்டி விட்டு சென்ற பூசாரி புதன்கிழமை கிருத்திகை என்பதால் அதிகாலை கோயிலை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, கருவறை கதவு மற்றும் நான்கு கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது கருவறையில் இருந்த 1 கிலோ எடையுள்ள மூன்று வெள்ளி கிரீடங்கள், மற்றும் வேல் , சேவல்கொடி திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும், உண்டியலை தனியாக எடுத்து ச் சென்று அங்குள்ள புதா் பகுதியில் வைத்து பூட்டை உடைத்து அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனா். இது.குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com