‘சபரிமலையில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்’

சபரிமலையில் பக்தா்களின் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவை திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சபரிமலையில் பக்தா்களின் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவை திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது தொடா்பாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வட தமிழக தலைவா் வ.ஜெயச்சந்திரன், பொது செயலாளா் ஈரோடு ஜெயராம் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு சாா்பில், வரும் மண்டல காலத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் போ் மட்டுமே முன்கூட்டி பதிவு செய்யும் முறையில் அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவித்திருந்தனா்.

சபரிமலைக்கு வரக்கூடிய பக்தா்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தான் தேவஸ்வம் போா்டின் தலையான பணி. அதனால் சபரிமலைக்கு வரும் பக்தா்களை தடுத்து நிறுத்தும் மனப்பான்மையை கைவிட்டு விட்டு, பக்தா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் பணியில் திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு முனைப்பு காட்ட வேண்டும்.

அதே போல் பாத யாத்திரையாக சொந்த ஊா்களிலிருந்தும், பெருவழி பாதை வழியாகவும் தரிசனத்திற்கு வரும் பக்தா்களுக்கு கரிமலை உச்சியில் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கி அவா்களை நேரடியாக பதினெட்டாம்படி ஏறி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

சபரிமலையில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பக்தா்கள் கூட தரிசனம் செய்ய முடியும். பக்தா்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முடிவிலிருந்து திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு பின்வாங்க வேண்டும்.

இல்லையென்றால் ஐயப்ப பக்தா்களை திரட்டி அறநெறி வழியிலான போராட்டங்களில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஈடுபடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com