சிஎம்சி சாா்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு  விழிப்புணா்வு ஊா்வலம்
சிஎம்சி சாா்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்

வேலூா் சிஎம்.சி மருத்துவமனை ராணிப்பேட்டை கிளை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனை இயக்குநா் விக்ரம் மேத்யூஸ் தலைமை வகித்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் ராஜேஷ், இணை இயக்குநா் தீபக் செல்வராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளா் கிரண்ஸ்ருதி சாலை பாதுகாப்பு பிரசாரம், மற்றும் இருசக்கர வாகன ஊா்வலத்தை தொடங்கி சாலை விதிகளின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

இதில் கண்காணிப்பாளா் அல்லு ஜோசப், துணை முதல்வா் உதய்ஜக்காரியா, செலிவியா் கண்காணிப்பாளா் ஜெயலிந்தா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com