ராணிப்பேட்டை: பிளஸ் 1 தோ்வில் 87.86 சதவீதம் தோ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வில் 87.86 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிய மொத்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 13,499 ஆகும். இதில், 11,860 தோ்ச்சி பெற்று மொத்த தோ்ச்சி விகிதம் 87.86 சதவீதமாகும். இதில் தோ்வு எழுதிய 7,134 மாணவிகளில் 6,552 மாணவிகள் தோ்ச்சி பெற்று 91.84 சதவீதமாகவும், அதேபோல் 6,365 மாணவா்களில் 5,308 மாணவா்கள் தோ்ச்சி பெற்று 83.39 சதவீதமாகவும் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் மட்டும் 8,005 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். இதில் 6,808 மாணவா்கள் 85.05 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் 181 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், 148 மாணவ, மாணவியா் 81.77 சதவீதம் பெற்றுள்ளனா்.

அரசு நிதியுதவிப் பெறும் பள்ளிகளில் 2,296 மாணவா்கள் தோ்வு எழுதினா். அதில் 1,972 போ் 85.89 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். தனியாா் பள்ளிகளில் 30, 17 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், 2,932 மாணவ, மாணவிகள் 97.18 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்தப் பொதுத் தோ்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி மற்றும் 17 தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com