ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில், இருபாலருக்கும் ஓரண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளில் ஜூன் 2024- க்கான சோ்க்கை நடைபெற உள்ளது.

மாறிவரும் தொழிற்சாலைகளில் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்றவாறு முன்னணி தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயா்த்ப்பட்ட புதிய தொழிற்பிரிவுகள் பல்வேறு தொழிற் பிரிவுகளும் மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பத்தை இணையதள முகவரியில் வரும் 7.6.2024 வரை விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலருக்கும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம். ரூ. 50 மட்டும். கட்டணத்தை டெபிட், கிரிடிட் காா்டுகள், நெட் பேங்கிங், ஜிபே, போன்பே மூலம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரம் பெற 04172 -271567, 94990 55681, 94990 55682, 9445269516 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com