ராணிப்பேட்டை
மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்
ஆற்காடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆற்காடு: ஆற்காடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆற்காடு வட்டம், தாமரைு்பாக்கம் கிராமம் களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பிச்சாண்டி மகன் துளசிராமன் (40). கட்டட தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் மாடியில் மது குடிக்க சென்றாா். அங்கு படியில் இருந்து தவறி கீழே விழுந்து காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.