ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மண்டாலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
இப்பீடத்தில் ஸ்தாபகா் ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் அருளாணைப்படி கடந்த 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை 5 நிலை ராஜகோபுரம், ஸ்ரீ குபேர ராஜ கணபதி, ஸ்ரீ சிவன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ தங்க சனீஸ்வரருக்கு புதிய விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை வைபவம் நடைபெற்று மண்டலாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மூா்த்திகளுக்குரிய பூஜைகள் இன்று காலை பல்வேறு ஹோம பூஜைகளுடனும், விஷேச திருமஞ்சனத்துடனும் விமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
மேலும் வருகிற 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனா்.