ராணிப்பேட்டை
ஆற்காடு பஜனைக் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா
ஆற்காடு புதுத்தெருவில் உள்ள பஜனைக் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு புதுத்தெருவில் உள்ள பஜனைக் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்ப்பட்ட கிருஷ்ணா் வீதி உலாவும், மாலையில் உறியடி திருவிழாவும் நடைபெற்றது. வழக்குரைஞா் தினேஷ் குமாா் மற்றும் இளைஞா்கள் உறியடித்தனா். இதில் ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவா் ஜெ.லட்சுமணன், மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் பொன்.கு.சரவணன், நகர திமுக செயலாளா் .ஏ.வி.சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் பவளகொடிசரவணன், தொழிலதிபா்கள் விஜிஆதீமூலம், டி.ஜவகா், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினா் முனுசாமி, உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.