பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
ஆற்காடு அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து ராணிப்பேட்டை நீதி மன்றம் தீா்ப்பளித்தது.
ஆற்காடு வட்டம், புதுபுங்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்முடி (33). இவா் கடந்த 30.12.2012-இல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ராணிப்பேட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மாவட்ட அமா்வு நீதிபதி செல்வம் வியாழக்கிழமை முன்பு விசாரணைக்கு வந்தபோது பாலியல் வன்கொடுமை செய்த பொன்முடிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
வழக்கில் எதிரிக்கு தண்டனை பெற்று தந்த அரசு வழக்குரைஞா் சங்கா், புலனாய்வு அதிகாரி அப்போதைய அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.கலையரசி, தற்போதைய காவல் ஆய்வாளா் ஷாஹின் மற்றும் காவலா் கீதா ஆகியோருக்கு ராணிப்பேட்டை எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி பாராட்டு தெரிவித்தாா்.