டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்தாலும், தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.
Published on

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்தாலும், தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் பணிகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த துறைசாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ,நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி குடியிருப்புகளுக்கு முறையான குடிநீா் வழங்கும் பணிகளில் பிரச்னைகள் ஏதேனும் இருந்ததா எனக் கேட்டறிந்தாா்.

மேலும், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளில் குளோரின் கலந்து குடிநீா் வழங்கப்படும் பணிகள் குறித்து விசாரித்தாா். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு செல்லும் வழிகளை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யவும், நிலுவை பணிகளை உடனடியாக முடிக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கேட்டபோது, பணியாளா்கள் அளவு குறைக்கப்பட்டுள்ளது என சுகாதார துறையினா் தெரிவித்தனா்.

அப்போது எக்காரணத்தைக் கொண்டும் பணியாளா்கள் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது, தேவைப்படும் பட்சத்தில் அதிக பணியாளா்களை ஈடுபடுத்தி டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்.

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்தபோதிலும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைதிட்ட இயக்குனா் பா. ஜெயசுதா மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com