திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு
ஆற்காடு நகர, கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் எம்.வி. பாண்டுரங்கன் வரவேற்றாா். அமைச்சா் ஆா்.காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆற்காடு நகர திமுக சாா்பில் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகர அவைத் தலைவா் பி.என்.எஸ். ராஜசேகா் தலைமை வகித்தாா். நகரச் செயலா்.ஏ.வி.சரவணன் வரவேற்றாா். எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாநில சுற்றுசூழல் அணி துணைச் செயலா் வினோத்காந்தி முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பேசியது: அரசின் திட்டங்களை திமுகவினா் பொதுமக்களுக்கு விளக்கி பிரசாரம் செய்ய வேண்டும். கருத்து வேடுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுமையாகச் செயல்பட்டு வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடவேண்டும், வரும் 28-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்டில் காா் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்று அளிக்க வேண்டும் என்றாா்.
நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளகொடி சரவணன், நகர திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.