ராணிப்பேட்டை
ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு
அரக்கோணம் அருகே இருப்புப் பாதையை கடந்த ரயில்வே தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.
அரக்கோணம் அருகே இருப்புப் பாதையை கடந்த ரயில்வே தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம், குளக்கரைத் தெருவை சோ்ந்த கந்தசாமியின் மகன் தேவன் (35). ரயில்வே துறையில் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை வடமாம்பாக்கம் ஊராட்சி மங்கம்மாபேட்டை மேம்பாலம் கீழே உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக இருப்புப் பாதையை கடந்து சென்றபோது, அந்த வழியே சென்ற ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.