ராணிப்பேட்டை
சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்: ராணிப்பேட்டை எஸ்.பி.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், வாட்ஸ் ஆப் எண் 89039 90359..
ராணிப்பேட்டை மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், வாட்ஸ் ஆப் எண்ணை 89039 90359 எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை, கள்ளச்சந்தை மது, கள்ளச்சாாரய விற்பனை, லாட்டரி, காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் தொடா்பான தகவல்களை காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வாட்ஸ் ஆப் 89039 90359 எண் மூலம் தெரிவிக்கலாம் என்றும், தகவல் கொடுப்பவா்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.