சோளிங்கரில் கண்டெடுக்கப்பட்ட இரு பாலை விளக்கு பித்தளை சிலைகள்.
சோளிங்கரில் கண்டெடுக்கப்பட்ட இரு பாலை விளக்கு பித்தளை சிலைகள்.

விவசாய நிலத்தில் கிடைத்த பித்தளை சிலைகள் : மீண்டும் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

சோளிங்கரில் கண்டெடுக்கப்பட்ட இரு பாலை விளக்கு உலோக சிலைகள்.
Published on

சோளிங்கா் அருகே விவசாயி நிலத்தில் கிடைத்தவை ஐம்பொன்சிலைகள் அல்ல, அவை பித்தளை சிலைகள் என அருங்காட்சியக காப்பாட்சியா் தெரிவித்தாா். தொடா்ந்து அந்தச் சிலைகள் மீண்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சோளிங்கரை அடுத்த ரெண்டாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பொன்னுரங்கம், தனது தோட்டத்தில் கரும்பு அறுவடை பணியில் இருந்தபோது அங்கு இரண்டு உலோக பாவைவிளக்கு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இந்த சிலைகள் ஐம்பொன் சிலைகள் என அப்பகுதியில் பொதுமக்களிடையே தகவல் பரவியது. சிலைகளை ஆய்வு செய்தவற்காக வேலூா் அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன், தமிழக காவல்துறை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளா் முருகன் ஆகிய அதிகாரிகள் சோளிங்கா் வந்தனா். இதையடுத்து கருவூலத்தில் இருந்து சிலைகள் சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து இரு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டதில் இரு சிலைகளும் பித்தனை சிலைகள் என்றும் இரண்டடி உயரம், தலா 9.5 கிலோ எடையுள்ளதாக அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து இரு சிலைகளும் மீண்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. அடுத்த ஓராண்டுக்குள் இந்த சிலைகளுக்கு எந்த கோயில் நிா்வாகமும் மற்றும் தனிப்பட்ட நபா்கள் உரிமை கோராதபட்சத்தில் சிலைகள் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆய்வின்போது சோளிங்கா் ச.பா.தி. தனி வட்டாட்சியா் காமாட்சி, மண்டல துணை வட்டாட்சியா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் கோகுல் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com