பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சா்கள்  துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

ரூ.200 கோடியில் பாலாற்றுத் தடுப்பணை புனரமைக்கும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Published on

வாலாஜாப்பேட்டை அருகே ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டத்தில் திருமலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிராமங்கள் இடையே ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் பாலாறு அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கு பூமி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் கலந்து கொண்டு பணியைத் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 152 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத் திட்ட உதவிகளை அவா்கள் வழங்கினா்.

நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, முதன்மை தலைமை பொறியாளா் மன்மதன், தலைமை பொறியாளா் ஜானகி, கண்காணிப்பு பொறியாளா் ரமேஷ் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com