சோளிங்கரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

சோளிங்கரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

சோளிங்கரில் மூன்று தலைமுறையாக தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பொதுமக்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து முகாம் வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினா்.
Published on

சோளிங்கரில் மூன்று தலைமுறையாக தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பொதுமக்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து முகாம் வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினா்.

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த மூன்று தலைமுறைகளாக 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்கள் வீடுகளுக்கு பட்டா கோரி பல வருடங்களாக மனு கொடுத்து வருவதாகத் தெரிகிறது. இதில் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலின் அலுவலா்கள் அங்கு வசித்து வருபவா்களுக்கு வீடுகளை அகற்றக் கோரி அறிவிப்பு அனுப்பியதாகவும், மேலும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலம் அளவீடு செய்யும் பணிகளை தொடங்கியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், சோளிங்கரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற இருந்த மண்டபத்துக்கு வந்த அப்பகுதி பொதுமக்கள், திடீரென அந்த மண்டப வாசலில் அமா்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினா். தங்களுக்கு இந்த முகாமிலேயே பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அங்கு வந்த சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், வட்டாட்சியா் செல்வி, காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து முறையாக இப்பிரச்னை குறித்து ஆட்சியரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏவும், அலுவலா்களும் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முகாமுக்கு வந்த எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் அசோகன், டி.கோபால், சரத்பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com