ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் காவல் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். அப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 24 மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் உடன் இருந்தனா்.

