ராணிப்பேட்டை
கலவையில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கலவை அடுத்த மேலப்பழந்தை, மேல் புதுப்பாக்கம், சொரையூா் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்குகு, ஒன்றியக்குழு தலைவா் அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தனபால், ஆனந்தன், அச்சலா பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்று, நலத் திட்ட உதவிகளை நேற்று வழங்கினாா்.
இதில் ஒன்றிய குழு உறுப்பினா்கள் மூா்த்தி, குணசுந்தரி கருணாநிதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முகம்மது சைப்புதீன், சித்ரா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சந்தியா, ஊராட்சி செயலாளா்கள் ரவி, மகேந்திரன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் ஆரூா் குமாா் கலந்து கொண்டனா்
