ராணிப்பேட்டை
வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்
ஆற்காடு அருகே ஆம்னி வேன்-பைக் மீது மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
ஆற்காடு அருகே ஆம்னி வேன்-பைக் மீது மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட ஜின்னா 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜஹாங்கீா் (52) இவா் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மிக்சா், அப்பளம் மற்றும் மசாலா பொருள்களை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரம் செய்து வந்தாா்.
இந்தநிலையில், சனிக்கிழமை வியாபாரத்துக்காக பொருள்களை எடுத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி வேன் வேப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கரவாகனம் மீது பின்னால் மோதியுள்ளது.
இதில் பலத்த ாயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
