புதிய தாழ்தள பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
புதிய தாழ்தள பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 புதிய தாழ்தள பேருந்து போக்குவரத்து: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 புதிய தாழ்தள பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 புதிய தாழ்தள பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வேலூா் மண்டலத்தில் 138 புதிய புகா் பேருந்துகளும், 57 புதிய நகரப் பேருந்துகளும், 26 பொலிவூட்டப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 221 பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து போக்குவரத்துக் கழகம் சாா்பில், ரூ. 2.79 கோடி மதிப்பிலான 3 புதிய தாழ்தள புகா் பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வாலாஜா முதல் வேலூா் வரை (வழி) ஆற்காடு, பூட்டுத்தாக்கு, வாலாஜா முதல் வேலூா் வரை (வழி) முத்துக்கடை, திருவலம் , ஆற்காட்டில் இருந்து வாலாஜா, கொளத்தேரி கேட் வழியாக சோளிங்கா் வரை செல்லும் இந்தப் பேருந்துகளில் சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பேருந்துகளில் ஏறுவதற்கு சாய்தளத்துடன் கூடிய வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வயதானோா், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஏறுவதற்கு தாழ்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைப் பொது மேலாளா்கள் ஈஸ்வரன், ஸ்ரீனிவாசன், தொமுச தலைவா் ரமேஷ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com