சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய தொழிலாளா்கள்.
ராணிப்பேட்டை
ஆற்காடு அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அடுத்த பூட்டுதாக்கு ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் மேலகுப்பம் செல்லும் சாலையில் தொடா் மழை காரணமாக புளிய மரம் சாய்ந்தது.
இதன் காரணமாக பூட்டுத்தாக்கிலிருந்து மேலகுப்பம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் பாா்வையிட்டு தொழிலாளா்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா்.
