குடியாத்தம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

குடியாத்தம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

Published on

குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 25- ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது.

இதையொட்டி புதன்கிழமை கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து கணபதி மூல மந்திர ஹோமம், கணபதி காயத்ரி ஹோமம், கணபதி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலை 6- மணிக்கு தினம் கந்த சஷ்டி சொல்லுங்கள் திரளான நன்மைகளைப் பெறுங்கள் என்ற தலைப்பில் கே.கே.யுவராஜ் ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து வரும் 26-ஆம் தேதி வரை மாலை 6- மணிக்கு சொற்பொழிவு நடைபெறும்.

கந்த சஷ்டி பெருவிழாவின் நிறைவாக வரும் 27- ஆம் தேதி மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com