ராணிப்பேட்டை மாவட்டத்தில் 219 ஏரிகள் நிரம்பின

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 219 ஏரிகள் நிரம்பின

Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடா் மழையால் மொத்தமுள்ள 369 ஏரிகளில் 219 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு சுமாா் 6,000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதில் பாசன வசதிக்காக காவேரிபாக்கம் பெரிய ஏரிக்கு 870 கன அடி நீரும், மகேந்திரவாடி ஏரிக்கு 140 கன அடி நீரும், சக்கரமல்லூா் ஏரிக்கு 38 கன அடி நீரும், தூசி ஏரிக்கு 120 கன அடி நீரும் வெளியேற்றப்படுகின்றது.

மீதமுள்ள 4,400 கன அடி நீரானது ஆற்றில் வெளியேற்றப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மொத்தமுள்ள 369 ஏரிகளில் 219 ஏரிகள் நிரம்பி முழுக் கொள்ளவை எட்டியுள்ளன.

மேலும், பாலாற்றில் நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com