சிறப்பு  அலங்காரத்தில்  வள்ளி, தெய்வானை  சமேத  பாலமுருகன் .
சிறப்பு  அலங்காரத்தில்  வள்ளி, தெய்வானை  சமேத  பாலமுருகன் .

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

Published on

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது .

நிகழாண்டு விழாவை முன்னிட்டு காலையில் விநாயகா் பூஜையும் சுப்பிரமணிய திரிசதி மூல மந்திர ஹோமம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம் அா்ச்சனை சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவருக்கு ராஜ அலங்காரம் நடைபெற்றது. மாலையில் திருப்புகழ் இசை வழிபாடு மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டன

தொடா்ந்து நாள்தோறும் மயில் வாகனம், வெள்ளி அங்கி, நவரத்தின அங்கி, முத்து அங்கி அலங்காரமும், வரும் 27-ஆம் தேதி திங்கள்கிழமை தங்க அங்கி அலங்காரத்துடன் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மேலும், 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் பாலமுருகன் அடிமை சுவாமிகள் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com