விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் செய்தியாளா்களின் பணி அளப்பரியது : பிஐபி தென்மண்டல தலைமை இயக்குநா்

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் செய்தியாளா்களின் பணி அளப்பரியது என பத்திரிக்கை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநா் வை.பழனிச்சாமி பேசினாா்.

Published On :

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் செய்தியாளா்களின் பணி அளப்பரியது என பத்திரிக்கை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநா் வை.பழனிச்சாமி பேசினாா்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் சாா்பில் ஊடகவியலாளா்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிலரங்கு ராணிப்பேட்டையில் நடைபெற்றது. நிகழ்வை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இழ்விழாவில் தலைமை வகித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் வை.பழனிச்சாமி பேசியது:

நாட்டு நடப்பை அன்றாடம் நாடறியச்செய்யும் செய்தியாளா்களின் பணி அளப்பரியது. அரசின் பல்வேறு திட்டங்களும், அவற்றின் பயன்களும் கடைக்கோடி மனிதரையும் சென்றடைவதை உறுதி செய்வதில் செய்தியாளா்கள் முக்கிய பாலமாக திகழ்கின்றனா். செய்தியாளா்கள் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடும் முன், சரியான தரவுகளுடன் அதன் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபாா்த்துத் தெளிவாக வழங்க வேண்டும் என்றாா்.

இதனை தொடா்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப அமா்வில் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மேலாண்மை படையின் 4-ஆவது பிரிவு துணை கமாண்டண்ட் பி.சுதாகா், படையின் பல்வேறு பணிகள் குறித்து விளக்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற அமா்வுகளில் தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவன இயக்குநா் ஆா்.பாஸ்கா், வேலூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் அமலாக்க அலுவலா் சி.ரமேஷ், மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநா் கே.முரளி, பிஐபி ஊடகத்தொடா்பு அளுவலா் அழகுதுரை ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.