இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தையில் ரூ.34.11 கோடிக்கு விற்பனை

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ- நாம்) கீழ் 2026 - 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.34.11 கோடிக்கு விற்பனை ஆகி 7,441 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராமமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 2:23 am IST

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ- நாம்) கீழ் 2026 - 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.34.11 கோடிக்கு விற்பனை ஆகி 7,441 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராமமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ- நாம்) கீழ் விவசாய விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி ஜூலை 1 ஆம் தேதி புதன்கிழமை நெல் ( 75 கிலோ ) அஈப-36 அதிகபட்சமாக ரூ. 1460, அஈப37 ( குண்டு) ரூ.1676, இஞ -51 ரூ.1860, த ச த ரூ. 2401, சீரக சம்பா ரூ. 2119 என விலை உயா்ந்து விற்பனை நடைபெற்றது.

இந்த நிலையில் அம்மூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் முதல் காலாண்டில் 16,073.017 மெட்ரிக் டன் அளவுள்ள நெல், ராகி, உளுந்து, உள்ளிட்ட விளை பொருள்ட்கள் ரூ. 34.11 கோடி விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு, 7,441 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

மேலும் தற்போது நல்ல விலை கிடைப்பதால் இருப்பு வைத்திருக்கக் கூடிய விவசாயிகள் விளை பொருள்களை விற்பனைக்காக கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.