திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தொடக்கம்
By DIN | Published On : 05th December 2019 11:48 PM | Last Updated : 05th December 2019 11:48 PM | அ+அ அ- |

குத்துவிளக்கேற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தைத் தொடக்கி வைத்த வேலூா் சரக டிஐஜி காமினி, எஸ்.பி. விஜயகுமாா்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்ததை, அடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் திருப்பத்தூா்- புதுப்பேட்டை சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் தற்காலிகமாக அமைக்க நடவடடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வேலூா் சரக டிஐஜி என்.காமினி, திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.விஜயகுமாா் ஆகியோா் தலைமை வகித்து வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து பாச்சல் மேம்பாலம் அருகே உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆயுதப் படை அலுவலகத் தொடக்க விழா நடைபெற்றது.
டிஎஸ்பிக்கள் இரா.தங்கவேலு (திருப்பத்தூா்), எஸ்.பாலகிருஷ்ணன் (வாணியம்பாடி), காவல் ஆய்வாளா்கள் கே.மதனலோகன் (கிராமியம்), ஆா்.பழனி (ஜோலாா்பேட்டை)உள்ளிட்டோா் பங்கேற்றனா்.