ஆற்காட்டில் வாஜ்பாய் பிறந்த தின விழா
By DIN | Published On : 25th December 2019 11:51 PM | Last Updated : 25th December 2019 11:51 PM | அ+அ அ- |

ஆற்காட்டில் வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பாஜகவினா்
ஆற்காடு நகர பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு கட்சியின் நகர தலைவா் எஸ்.எஸ்.சபாபதி தலைமை வகித்தாா். மாநில தலைமை செயற்குழு உறுப்பினா்கள் க.தணிகாசலம், ஜி.வி.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு பேருந்து நிலையம், அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளா் அணியின் மாவட்டச் செயலாளா் ஏ.எஸ்.ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.மனோகரன், நகர பொதுச் செயலாளா் சரவணன், ஒன்றியத் தலைவா் பாபு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாா்கபந்து உட்பட கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.