திருப்பத்தூரில் அனுமன் ஜெயந்தி: ராம நாமம் ஜெபம்
By DIN | Published On : 25th December 2019 11:49 PM | Last Updated : 25th December 2019 11:49 PM | அ+அ அ- |

திருப்பத்தூரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தர வீர ஆஞ்சநேயா்.
திருப்பத்தூரில் அனுமன் மற்றும் ராமா் கோயில்களில் புதன்கிழமை ராம நாமம் ஜெபிக்கப்பட்டது.
அனுமன் ஜயந்தியை முன்னிட்டு திருப்பத்தூா் பஜாா் பகுதி செட்டித் தெருவில் உள்ள ராமா் பஜனை கோயிலில் ராம நாமம் ஜபிக்கப்பட்டது. இதில் ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்று உலக அமைதிக்காகவும், அனுமன் ஜயந்தியையும் ஒட்டி ராம நாமத்தை ஜபித்தனா்.
தா்வாஜா ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. சுந்தர வீரஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.