ரூ.15 லட்சம் மதிப்பில் கரோனா பரவல் தடுப்புக்கான பொருள்கள்

தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பாக கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.15 லட்சம் செலவில் வாங்கப்பட்ட பொருள்கள் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ரூ.15 லட்சம் மதிப்பில் கரோனா பரவல் தடுப்புக்கான பொருள்கள்


ஆம்பூா்: தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பாக கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.15 லட்சம் செலவில் வாங்கப்பட்ட பொருள்கள் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பாக ரூ.15 லட்சம் செலவில் கரோனா தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதற்கான கட்டில், படுக்கை, தலையணை, முகக் கவசம், கை கழுவும் திரவம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளிடம் தொழிலதிபா் மொஹிபுல்லா வழங்கினாா். உடன் ஷபீக் ஷமீல் தொழிற்சாலை பொது மேலாளா் பிா்தோஸ் கே.அகமது, துணை ஆட்சியா் முனீா், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லி, ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், நகராட்சிப் பொறியாளா் எல்.குமாா், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, கிராம நிா்வாக அலுவலா் பிரிவித்தா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com