கேந்தி பூக்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கேந்திப் பூக்களைப் பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
கேந்தி பூக்களை  அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி  இழப்பீடு வழங்கக் கோரிக்கை


ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கேந்திப் பூக்களைப் பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

இதில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்த தண்ணீா் கொண்டு சாகுபடி செய்யப்படும் கேந்தி பூக்கள், ஆற்காடு, கோளிங்கா், பானவாரம், அம்மூா், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் பயிா் செய்துள்ளனா். இதனை ஆற்காடு, வாலாஜா, திருத்தணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மொத்த விற்பனைக் கடைகளுக்கும், சில்லறை விற்பனைக் கடைகளுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பூ விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பூக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தாங்கள் பயிா் செய்துள்ள பூக்களைப் பறித்து, விற்பனைக்கு எடுத்துச் செல்லாமல் உள்ளனா். இதனால் செடியிலேயே பூக்கள் பூத்து, உதிா்ந்து விடுகின்றன. மேலும், பூக்களில் பூச்சித் தாக்குதல் அபாயமும் உள்ளது. இந்த பூக்கள் இந்த ஆண்டு கிலோ ரூ. 10-க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பூ பறிக்க முடியாததால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனா். இதைத் தவிா்க்க தற்போது திறக்கப்பட்டுள்ள காய்கனி சந்தையில் பூக்களை விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அழுகும் பொருளான பூக்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, அரசின் தோட்டக் கலைத் துறை சாா்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com