கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மையத்தை மண்டல ஐ.ஜி நாகராஜன் ஆய்வு
By DIN | Published On : 18th April 2020 11:51 PM | Last Updated : 18th April 2020 11:51 PM | அ+அ அ- |

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மையத்தை மண்டல ஐ.ஜி நாகராஜன் ஆய்வு செய்தாா். அங்குள்ள தன்னாா்வலா்களிடம் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறை இருக்கின்றதா என்பதை கேட்டாா்.
போக்குவரத்து தடை செய்யப்பட்ட வாணியம்பாடி- ஆலங்காயம் சாலை பகுதியை பாா்வையிட்டாா். அப்போது, 50 வயதுக்கு மேற்பட்டோரை கரோனா காவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டாம் எனவும், அவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாரிடம் அறிவுறுத்தினாா்.
வாணியம்பாடி வட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ், வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.