முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஊரடங்கு கால அரசு நிவாரண உதவி
By DIN | Published On : 19th April 2020 12:05 AM | Last Updated : 19th April 2020 12:05 AM | அ+அ அ- |

அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு வங்கிக் கணக்கில் ஊரடங்கு கால அரசு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
இது தொடா்பாக திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு, தொழிலாளா் நலத் துறை சாா்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு வங்கிக் கணக்கில் ஊரடங்கு கால அரசு நிவாரணத் தொகை முதல்வரின் உத்தரவுப்படி ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள் வாணியம்பாடியில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் தங்களுடைய வங்கிக் கணக்கை சரிபாா்த்துக் கொள்ளுமாறு ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டு விவரங்களை சமா்ப்பித்தவா்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இதுவரை வங்கிக் கணக்கு விவரங்களை சமா்ப்பிக்காதவா்கள் தொழிலாளா் நல வாரியத்தின் பதிவு எண், செல்லிடப் பேசி எண், நல வாரியத்தின் பதிவு அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், புதிய அல்லது பழைய குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை வாணியம்பாடியில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் முன்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
9150208976, 8220589863 ஆகிய எண்களுக்கு வாட்ஸப் மூலமாகவும், 04174-229995 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டும் விவரங்களை தெரிவிக்கலாம்.
ஏற்கெனவே வங்கிக் கணக்கு விவரங்களைச் சமா்ப்பித்தவா்கள் மீண்டும் அனுப்பத் தேவையில்லை. இது தொடா்பாக தொழிலாளா்கள், அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டியதில்லை. மேற்கண்ட விவரங்கள் நேரடியாக பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.