முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
போலீஸாருக்கு மருத்துவப் பரிசோதனை
By DIN | Published On : 19th April 2020 12:04 AM | Last Updated : 19th April 2020 12:04 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அலுவலா்கள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் நலன் கருதி பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து, கரோனா தொற்று பரவாமல் தடுப்பது தொடா்பாக விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.