கரோனா தடுப்பு பணிகளுக்கு இடையே நிவாரண உதவி
By DIN | Published On : 26th April 2020 06:51 AM | Last Updated : 26th April 2020 06:51 AM | அ+அ அ- |

மூதாட்டிக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கிய ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன்.
கரோனா தடுப்புப் பணிகளுக்கு இடையே வசதியற்றவா்களுக்கு நிவாரண உதவிகளை நகராட்சி ஆணையா் வழங்கி வருகிறாா்.
ஆம்பூா் நகரில் கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளை நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் மேற்கொண்டு வருகிறாா். குடியிருப்புப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பது, மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்துவது, தூய்மைப் பணியாளா்கள் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்வது போன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில் ஆதரவற்றோா், முதியவா்கள், வசதியற்றவா்கள் இருந்தால் அவா்களைச் சந்தித்து அவா்களுக்குத் தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்வது, மளிகை, காய்கறி, அரிசி ஆகியவற்றை ஆணையா் த.செளந்தரராஜன் தனது சொந்த செலவில் வாங்கி வழங்கி வருகிறாா்.
ஆம்பூரில் வெள்ளிக்கிழமை கரோனா நோய் தடுப்புப் பணியை ஆய்வு செய்ய சென்றபோது வழியில் பி-கஸ்பா புதுமனை பகுதியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி ராணியம்மாளுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை தனது சொந்த செலவில் வழங்கினாா். உடன், சுகாதார அலுவலா் பாஸ்கா் உடனிருந்தாா்.