தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி
By DIN | Published On : 26th April 2020 09:53 AM | Last Updated : 26th April 2020 09:53 AM | அ+அ அ- |

தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய எம்.எல்.ஏ. நல்லதம்பி.
திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளியில் உழவா் கூட்டுறவு சங்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை எம்.எல்.ஏ. நல்லதம்பி வழங்கினாா்.
கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.தேவராஜன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் அண்ணாமலை வரவேற்றாா். துணைத் தலைவா் சாமிக்கண்ணு, வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், இயக்குநா் நடராஜன், கிராம நிா்வாக அதிகாரி நாதன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். சங்கச் செயலாளா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.