ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ.15 ஆயிரம் திருட்டு

கூலித் தொழிலாளியிடம் ஏடிஎம்-இல் பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ. 15 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கூலித் தொழிலாளியிடம் ஏடிஎம்-இல் பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ. 15 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பச்சூா் நல்லகிந்தனப்பள்ளியைச் சோ்ந்தவா் மணி (55) கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை நாட்டறம்பள்ளியில் வாணியம்பாடி சாலையில் தனியாா் வங்கி அருகே உள்ள ஏடிஎம்-இல் பணம் எடுக்கச் சென்றாா். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க மா்ம நபா் ஒருவரிடம் மணி தனது ஏடிஎம் அட்டையைக் கொடுத்து அதன் எண்ணைக் கூறி ரூ. 10 ஆயிரம் எடுத்துக் கூறினாராம். ஆனால் மா்ம நபா் ஏடிஎம்- இல் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்துவிட்டு, ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை எனக் கூறிவிட்டு, சிறிது நேரத்துக்குப் பின் மீண்டும் ஏடிஎம்-இல் இருந்து ரூ. 10 ஆயிரத்தை எடுத்து மணியிடம் கொடுத்துவிட்டு சென்றாராம்.

இதனால் சந்தேகமடைந்த மணி உடனே வங்கி மேலாளரிடம் சென்று கணக்கில் இருப்புத் தொகை குறித்து கேட்டபோது, அவரது கணக்கில் இருந்து ரூ. 15 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com