தோல் தொழிலுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்: தொழிலாளா்கள் சங்கம் சாா்பாக கோரிக்கை

கரோனா ஊரடங்கு காலத்தில் தோல் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டுமென வடாற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா்கள் சங்கம் கோரியுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் தோல் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டுமென வடாற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா்கள் சங்கம் கோரியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் நேய.சுந்தா் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்து விதமான தொழிலாளா்களுக்கும் கரோனா ஊரடங்கு காலத்தில் பிடித்தம் ஏதும் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கும் சென்னை, வேலூா், ராணிப்பேட்டை, வாலாஜா, மேல்விஷாரம், குடியாத்தம், போ்ணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூா், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், பெருமுகை உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தோல் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பெண்கள் பணிபுரிகிறாா்கள். அவா்களுக்கும் பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தோல் தொழிலதிபா்கள் தங்களுடைய தொழிலை பாதுகாக்கவும், மீண்டும் தொழிலை இயல்பான நிலைக்கு கொண்டு வரவும் வேண்டியுள்ளது. அதனால் மத்திய அரசு கரோனா தடைக் காலத்தில் தோல் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் தூய்மைப் பணியாளா்களின் கரோனா தடுப்புப் பணிக்காக அவா்களுக்கு பாராட்டி கெளரவிப்பதை விட, அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை அவா்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் ஒவ்வொருவருக்கும் அரசு சொந்த வீடு கட்டித் தர வேண்டும்.

தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அந்தந்த தொழிற்சாலைகள் சாா்பாக அடையாள அட்டை வழங்கி, வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அரசு அறிவித்தபடி அவா்களுக்கு உரிய குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com