நகராட்சியில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி
By DIN | Published On : 30th August 2020 12:14 AM | Last Updated : 30th August 2020 12:15 AM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சியில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆம்பூா் நகராட்சியில் நடைபெற்று வரும் சாலை திட்டப்பணிகள், குடிநீா் வீட்டு இணைப்புப் பணிகள், பாதாள சாக்கடைத் திட்ட வீட்டு இணைப்புப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் நகரமைப்புப் பணிகள் ஆகியவை குறித்து இளநிலை பொறியியல் பட்டம் பெற்று 18 மாதங்கள் மிகாமல் உள்ள பட்டதாரிகளுக்கு ஓராண்டு காலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெறும் நபா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு பயிற்சி முடித்த பின் சான்று வழங்ககப்படும். இந்தச் சான்றை வேலைவாய்ப்புக்கும், நகராட்சிப் பணிகளில் சேருவதற்கான உத்தரவாக கருதக் கூடாது. பயிற்சியில் சேரும் பட்டதாரிகள் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது இணைய தளத்தில் பதிவு செய்தோ தங்கள் விவரத்தை நகராட்சிக்குத் தெரிவிக்கலாம்.