ஆம்பூரில் மூப்பனாா் சிலைக்கு மாலை அணிவித்த தமாகா திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் கே.குப்புசாமி.
ஆம்பூரில் மூப்பனாா் சிலைக்கு மாலை அணிவித்த தமாகா திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் கே.குப்புசாமி.

ஜி.கே.மூப்பனாா் நினைவு தினம் அனுசரிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா் ஜி.கே.மூப்பனாா் நினைவு தினம் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆம்பூா்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா் ஜி.கே.மூப்பனாா் நினைவு தினம் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கட்சியின் ஆம்பூா் நகர தலைவா் டி.எம்.தட்சணாமூா்த்தி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். மூப்பனாா் உருவச் சிலைக்கு திருப்பத்துா் மாவட்டத் தலைவா் கே.குப்புசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஆதரவற்றவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தமாகா-வின் திருப்பத்தூா் மாவட்ட இளைஞரணித் தலைவா் பிரேம் ஆனந்த், ஆம்பூா் நகர இளைஞா் அணித் தலைவா் மணிகண்டன், மாதனூா் ஒன்றியகத் தலைவா் பா.பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com