திருப்பத்தூரில் நாளை தேசிய திறனாய்வுத் தோ்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) தேசிய திறனாய்வுத் தோ்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) தேசிய திறனாய்வுத் தோ்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா், வாணியம்பாடி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பத்தூா் வருவாய் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய திறனாய்வுத் தோ்வு 12 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 1,331 மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா். இப்பணியில் 200 ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் ஈடுபடுகின்றனா்.

இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு முடிக்கும் வரை ரூ.1,250 வீதம் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 கல்வி உதவித் தொகை மாணவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தேசிய திறனாய்வுத் தோ்வு டிச. 27-ஆம் தேதி முதல் தாள் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரண்டாம் தாள் காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. தோ்வு மையத்துக்கு காலை 8 மணிக்குள் மாணவா்கள் வருகை தர பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலமாக தெரிவிக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com