திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம்

ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் குட்டிமணி, மாநில மகளிரணி தலைவா் நிா்மலா ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜோலாா்பேட்டை நகரச் செயலாளா் ஞானமோகன் வரவேற்றாா்.

தொடா்ந்து ஆசிரியா் நகா் பேருந்து நிலையத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை பேரணி சென்றனா். மாநில இளைஞரணி துணை அமைப்புச் செயலாளா் அன்பு சக்தி, மாவட்டத் தலைவா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில்... பாமக மாநில துணைப் பொதுச் செயலாரும், முன்னாள் எம்எல்ஏவுமான டி.கே.ராஜா தலைமையில் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com