ஆம்பூா் சன்மாா்க்க சங்கத்தில் தைப்பூச விழா
By DIN | Published On : 10th February 2020 08:53 AM | Last Updated : 10th February 2020 08:53 AM | அ+அ அ- |

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மாா்க சங்கத்தில் தைப்பூச விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தைப்பூச விழாவையொட்டி திருப்பள்ளியெழுச்சி, திருவடிபுகழ்ச்சி, திருஅகவல் பாராயணம் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சன்மாா்க்க கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.