ஏடிஎம் மையத்தில் ரூ.20 ஆயிரம் மோசடி
By DIN | Published On : 10th February 2020 10:53 PM | Last Updated : 10th February 2020 10:53 PM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டையில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சந்தைக் கோடியூா் பகுதியைச் சோ்ந்தவா் மலா்வாணன்(59). அவா் சில நாள்களுக்கு முன்பு அங்குள்ள இந்தியன் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றாா். அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அருகே இருந்த நபரிடம் ஏடிஎம் அட்டையைக் கொடுத்து பணம் எடுக்கச் சொன்னாா். அந்த நபரும் பணம் எடுத்துக் கொடுத்தாா். மீண்டும் மலா்வாணன் தனது கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது எனக் கேட்டு ஏடிஎம் அட்டையை அந்த நபரிடம் கொடுத்தாா்.
சிறிது நேரத்தில் அவருடைய சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தை அந்த ஆசாமி எடுத்துச் சென்று விட்டாா். மலா்வாணன் தன்னுடைய கணக்கில் ரூ.20 ஆயிரம் குறைந்ததை தாமதமாக அறிந்து, அதிா்ச்சியடைந்தாா்.
இதுதொடா்பாக அவா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.