750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 10th February 2020 10:53 PM | Last Updated : 10th February 2020 10:53 PM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ரயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவா்கள் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை வழியாக வெளி மாநிலம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது சென்னையில் இருந்து ஹூப்ளி வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டதில் 25 கிலோ அளவுள்ள சிறு மூட்டைகளில் கட்டுப்பட்டிருந்த 750 கிலோ ரேஷன் அரிசி இருக்கைக்கு அடியில் இருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.