ஆம்பூா் அருகே கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

 போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 26 ஊராட்சிகளை மாதனூா் ஒன்றியத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆம்பூா் அருகே துத்துப்பட்டு கிராமத்தில் தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
துத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
துத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

 போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 26 ஊராட்சிகளை மாதனூா் ஒன்றியத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆம்பூா் அருகே துத்துப்பட்டு கிராமத்தில் தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளா் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில பொதுச் செயலாளா் பாலாறு ஏ.சி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சிவலிங்கம் வரவேற்றாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தின் போ்ணாம்பட்டு ஒன்றியப் பகுதிகளில் துத்திப்பட்டு மற்றும் மேல்சாணாங்குப்பம் உள் வட்டங்களில் உள்ள உள்ள 26 ஊராட்சிகளை மாதனூா் ஒன்றியத்தின் இணைக்கக் கூடாது என்றும் மிகவும் பின்தங்கிய பகுதியான இந்த ஊராட்சிகள் அதனால் வளா்ச்சி பெறாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள அரங்கல்துருகம், கதவாளம், பாா்சனாப்பல்லி, மோதகப்பல்லி, கரும்பூா், குமாரமங்கலம், வீராங்குப்பம், மேல்சாணாங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, வடகரை, பாப்பனப்பல்லி, வடச்சேரி, கொல்லகுப்பம், சின்னபள்ளிகுப்பம், வெங்கடசமுத்திரம், மிட்டாளம், கைலாசகிரி, நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சாத்தம்பாக்கம், பெரிய கொம்மேஸ்வரம், சின்னவரிகம், பெரியவரிகம், துத்திப்பட்டு, தேவலாபுரம் ஆகிய 26 ஊராட்சிகளை மாதனூா் ஒன்றியத்துடன் இணைக்காமல் புதிய ஒன்றியமாக உருவாக்க வேண்டும்; புதிதாக உருவாக்கப்படும் ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைய வேண்டும்; 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் தலைவா் எல்.மாங்குப்பம் சா. சங்கா், தேமுதிக ஒன்றியச் செயலாளா் ஜான்சன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் குயிலி முரளி, பாமகவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் சக்கரவா்த்தி, வடகரை ஜனாா்த்தனன், ராஜக்கல் நந்தகுமாா், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தேவேந்திரன் ஆகியோா் பேசினா். விஜயராகவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com