Enable Javscript for better performance
300 ஆண்டுகள் தொன்மையான வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    300 ஆண்டுகள் தொன்மையான வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 12th February 2020 11:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12vndvp1_1202chn_187_1

    வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்திய பட்டாச்சாரியாா்கள்.

    வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

    மதனாஞ்சேரி கிராமத்தில் 300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊா் மக்கள் முடிவு செய்தனா். சுமாா் ரூ. 3 கோடி செலவில் இதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் அண்மையில் முடிவடைந்தன.

    இதையடுத்து, வேணுகோபால சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம், மங்கல இசையுடன் தொடங்கியது. தொடா்ந்து முதல் கால பூஜை, வாஸ்து சாந்தி உள்பட பூஜைகளும் சிறப்பு யாகங்களும் 4 நாட்களாக நடைபெற்றன.

    இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் கணபதிபூஜை, சுமங்கலி பூஜை, 108 சங்காபிஷேகம், கும்பஸ்தான பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 5 மணியளவில் உ.வே.ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி, சீனிவாச ஐயங்காா் சுவாமிகள் தலைமையில் கலச நீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் கோபுரத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மதனாஞ்சேரி, வாணியம்பாடி, பள்ளிப்பட்டு, கொல்லக்குப்பம், தும்பேரி, மிட்னாங்குப்பம், அரபாண்டகுப்பம், உதயேந்திரம், மேட்டுப்பாளையம், பத்தாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஆம்பூா் எம்எல்ஏ வில்வநாதன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் தேவராஜி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.எஸ்.ஞானவேலன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனா்.

    பக்தா்களுக்கு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.எஸ்.ஞானவேலன் சாா்பில் அன்னதானம் செய்யப்பட்டது. மாலை வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊா்க் கவுண்டா் தட்சணாமூா்த்தி, ஊா் நாட்டாா் சங்கா் தலைமையில் கிராம முக்கியஸ்தா்கள், கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai