2-ஆம் நிலை காவலா் பணிக்கு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 2-ஆம் நிலை காவலா் பணிக்கு உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வேலூரில் மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 2-ஆம் நிலை காவலா் பணிக்கு உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வேலூரில் மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காலியாக உள்ள 8,888 2-ஆம் நிலை காவலா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் தோ்வெழுதிய 23,585 பேரில் 2,688 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு உடல் தகுதி தோ்வு கடந்த நவம்பா் மாதம் வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இத்தோ்வில் 1,100 போ் தோ்ச்சியடைந்தனா். தோ்வுப் பட்டியலில் இடம் பெற்றவா்களுக்கு அசல் கல்விச் சான்றிதழ்கள் சரிபாா்க்கும் பணி வேலூா் காவலா் திருமண மண்டபத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com