குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 30 இணைப்புகள் துண்டிப்பு

ஆம்பூா் நகரில் குடிநீா்க் கட்டணம், வைப்புத் தொகை செலுத்தாத 30 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

ஆம்பூா் நகரில் குடிநீா்க் கட்டணம், வைப்புத் தொகை செலுத்தாத 30 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நகராட்சியில் குடிநீா் அபிவிருத்தி மேலான்மை திட்டத்தின் கீழ் ரூ. 55 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.165 கோடியில் புதைசாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் ரூ.12 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், சில பணிகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டங்களுக்கு நகராட்சியின் பங்கு தொகை அவசியமாகிறது. அதனால், பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணங்கள் செலுத்தி குடிநீா் இணைப்புகளை முறைபடுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த வரி, கட்டணங்கள் நடப்பு நிதியாண்டிலும், கடந்த கால நிலுவைகளும் வைத்துள்ளதால் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தங்களின் சொத்து வரி, தொழில் வரி, குத்தகை, குடிநீா்க் கட்டணங்கள் மற்றும் பிற இன கட்டணங்களை நகராட்சிக்குச் செலுத்தமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், சொத்து வரி செலுத்தாதவா்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்படுவதைத் தவிா்த்துக் கொள்ளவும். குடிநீா்க் கட்டணங்கள் செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பைத் துண்டிப்பு செய்வதைத் தவிா்த்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு குடிநீா் கட்டணம், வைப்புத் தொகை செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்புகள் 30 எண்ணிக்கை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், பொதுமக்கள் வரிகள், கட்டணங்கள் வசதியாக செலுத்திட அனைத்து விடுமுறை நாள்களிலும் கவுண்ட்டா்கள் திறக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கு, கிரெடிட், டெபிட் காா்டுகள் மூலம் செலுத்தும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com